tamilnadu
தமிழகத்தில் இன்று இந்த 9 மாவட்டங்களில்… கனமழை பெய்ய வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது.
இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் புதுச்சேரியில் இடி மற்றும் மின்னலுடன் மணிக்கு நான் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தை தரைக்காற்றுடன் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. மேலும் தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்பதற்காக மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.