குரூப் 4 தேர்வில் பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
டிஎன்பிஎஸ்சி சார்பாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சு, சுருக்கெத்தார் வன பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பானது கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த அறிவிப்பின் மூலம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதற்கான எழுத்து தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி தமிழக முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 18 லட்சத்துக்கு அதிகமானோர் எழுதி இருக்கிறார்கள். இதற்கான முடிவு வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களை அதிகரிப்பதற்கு டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
குரூப் 4 தேர்வு அதிகரிப்பதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் பேர் எழுதியிருக்கும் இந்த தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் தற்போது 6724 ஆக உள்ள நிலையில் இன்னும் கூடுதல் பணியிடம் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.