Latest News
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… கூடுதலாக 480 காலி பணியிடங்கள் சேர்ப்பு… வெளியான தகவல்…!
நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 450 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக tnpsc நிர்வாகம் அறிவித்திருக்கின்றது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இதில் காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் 6,244 காலி பணியிடங்களுக்கு கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது.
இதில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநில உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து-தட்டச்சர்- 445, தனிப்பட்ட உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 என்று மொத்தம் 6 நான்கு காலிப் பணியிடங்கள் இருந்தது.
இந்தப் போட்டி தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியிட்டது. அதையடுத்து இந்த பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 6244 பணியிடங்கள் இருக்கும் நிலையில் 20 லட்சத்து 37, 101 பேர் விண்ணப்பித்தனர்.
அதாவது ஒரு பணியிடத்திற்கு சுமார் 326 பேர் போட்டியிடும் கணக்கு. இந்நிலையில் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக tnpsc நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையால் 6224 இல் இருந்து 6704 ஆக உயர்ந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.