tamilnadu
அரசு தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு… குரூப் 2, 2A தேர்வுக்கு நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு எழுதும் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்ததாவது: “தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 விற்கு 507 காலிப்பணியிடங்களும், குரூப் 2a விற்கு 1820 பணியிடங்கள் என்று மொத்தம் 2327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியானது.
இதில் குரூப் 2, 2a விற்கான முதல் நிலை தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. அதன்படி சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை முதல் நடத்தப்பட உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இங்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல் மற்றும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்திற்கு சென்று நேரடியாக கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.