Connect with us

இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் ஜொலிக்குது… முதல்வர் ஸ்டாலின் பெருமை…!

tamilnadu

இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் ஜொலிக்குது… முதல்வர் ஸ்டாலின் பெருமை…!

இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் ஜொலித்து வருகின்றது என்று முதல்வர் மு க ஸ்டாலின் பெருமிதமாக கூறியிருக்கின்றார். கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை மத்திய அரசின் கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்து இருக்கின்றது.

ஐஐடி ஒட்டு மொத்த பிரிவில் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக முதல் இடத்தை பிடித்திருக்கின்றது. இந்நிலையில் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை சுட்டிக்காட்டி இருக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் சில விஷயங்களை பகிர்ந்திருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலித்து வருகின்றது. என்ஐஆர்எப் தரவரிசையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முன்னிலை வகிக்கின்றது. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னிலையில் உள்ள திராவிட மாடலுக்கு இது பெருமை. நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்புதல்வன் போன்ற முதன்மை திட்டங்களால் தமது மாணவர்களின் உயர்கல்வியில் உச்சத்தை தொடுவார்கள் ” என்று அந்த பதிவில் முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.

More in tamilnadu

To Top