tamilnadu
மின்சார கட்டண முறையில் மாற்றம்… மக்களே இத முக்கியமாக கவனிங்க… வெளியான அதிரடி உத்தரவு…!
தமிழகத்தில் சுமார் 24 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் இருக்கின்றது. குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை என்று மொத்தமாக 3 கோடியே 32 லட்சம் மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை இருக்கின்றது. இந்த 2 மாதத்திற்கு ஒரு முறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின்கட்டணத்தை மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக அல்லது ஆன்லைன் மூலமாக செலுத்தி வருகிறார்கள்.
கடந்த நிதியாண்டில் அனைத்து விதமான கட்டணங்களை சேர்த்து மொத்தம் 60 ஆயிரத்து 55 கோடி வசூல் செய்யப்பட்டது. இதில் 83 சதவீதம் ஆன்லைன் மூலமாக மட்டும் வசூல் செய்யப்பட்டது. மத்திய அரசு உத்தரவின் பெயரில் 20 ஆயிரத்துக்கும் மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக பெறக்கூடாது என்ற நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை 100% உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக இனி ரூ. 5000 மேல் உள்ள மின் கட்டணங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே நுகர்வோர்கள் கட்ட வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்திருக்கின்றது.
இது உடனடியாக அமலுக்கு வர உள்ள நிலையில் மின்வாரிய அலுவலக கவுண்டர்களில் இனி 5000 க்கு மேல் இருக்கும் மின் கட்டண தொகையை காசோலை மற்றும் டிடி மூலம் மட்டுமே செலுத்த முடியும். இரு மாதத்திற்கு 820 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் அனைவருக்கும் 5000 ரூபாய்க்கு மின் கட்டணம் வரும். இனி அவர்கள் ஆன்லைன் அல்லது மின் அலுவலகங்களில் காசோலை டிடி மூலம் மட்டும் பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.