Latest News
பெண்களுக்கு 50,000 உதவித்தொகை… அறிமுகமாகும் புதிய திட்டம்… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்… முழு தகவல் இதோ…!
தமிழக அரசு பெண்களின் மேம்பாட்டிற்காக புதிய திட்டத்தின் கீழ் ரூபாய் 50,000 மானியம் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழக அரசு சார்பாக மகளிர் மேம்பாட்டிற்காக புதிய திட்டத்தின் கீழ் 50000 மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நழிவுற்ற பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். இந்த மானியம் தொழில் தொடங்குவதற்கு வழங்கப்படுகின்றது. ஏற்கனவே தமிழக அரசு சார்பாக மகளிர் மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதில் ஒரு பகுதி மாதம் வழங்கும் மகளிர் உதவி தொகை திட்டம். இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக பெண்கள் சிறு தொழில் செய்ய உதவி செய்யும் வகையில் 50000 மானியம் வழங்கும் புதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதிலும் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் சமூக நலத்துறை சார்பில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் முக்கியமாக 200 பயனாளிகளுக்கு பல ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க ஒரு கோடி செலவில் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள் போன்ற சுயதொழில் செய்ய உதவி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதில் விண்ணப்பிக்க 25 முதல் 45 வயது குட்பட்டவராக இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு முறை மட்டும் மானியம் பெற தகுதியானவர்கள். மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், நலிவுற்றவர், ஆதரவற்றவர் மற்றும் பேரிளம் பெண் என்பதற்கான சுய அறிவு சான்று, வருவாய் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் தற்போதைய வசிப்பிடம், முகவர்களுக்கான சான்று ஆகியவற்றை இணைத்து சமூக நல ஆர்வரிடம் வழங்குவதன் மூலம் இந்த மானியத்தை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.