tamilnadu
24 காவல் உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்… தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு…!
தமிழ்நாட்டில் 24 காவல் உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் 24 காவல் உயர் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. அதன்படி சென்னை திருவல்லிக்கேணி காவல்துறை ஆணையராக செல்வ நாகரத்தினம் நியமிக்கப்பட்டு இருக்கின்றார். சென்னை மயிலாப்பூர் துணை காவல் கண்காணிப்பாளராக ஹரிஹர பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை நுண்ணறிவு பிரிவு ஆணையராக ராமமூர்த்தி இருந்த நிலையில் மற்றொரு துணை ஆணையராக சக்தி கணேசன் நியமிக்கப்பட்டிருக்கின்றார். சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக சுஜித் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றார். தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக ஆல்பர்ட் ஜான் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றார்.
நீலகிரி மாவட்ட எஸ்பியாக நிஷா நியமிக்கப்பட்டு இருக்கின்றார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக ஆதர்ஷ் பச்சேரா நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார். வேலூர் மாவட்டம் எஸ் பி ஆக மதிவாணன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டிருக்கின்றார். திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார். தர்மபுரி மாவட்ட எஸ்பி ஆக மகேஸ்வரன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.