Latest News
சென்னையில் உதயமாகும் புதிய தாலுக்கா… எங்கு தெரியுமா..? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு..!
சென்னை, கொளத்தூர் பகுதியை புதிய தாலுக்காவாக உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
சென்னை மாவட்டத்தில் தண்டையார்பேட்டை, அமைந்தகரை, அயனாவரம், எழும்பூர், கிண்டி, மாம்பழம், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், வேளச்சேரி, மதுரவாயில், திருவெற்றியூர், சோளிங்கநல்லூர், மாதவரம், அம்பத்தூர், ஆலந்தூர் என்று ஏற்கனவே 16 தாலுகாக்கள் இருக்கின்றன.
இதில் அயனாவரம் தாலுகாவில் உள்ள கொளத்தூரை பிரித்து புதிய தாலுகாவை உருவாக்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கின்றது. இது தொடர்பாக அரசு செயலாளர் ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “சென்னை மாவட்டத்தில் உள்ள மத்திய சென்னை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அயனாவரம் தாலுகாவை சீரமைத்து கொளத்துறை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட உள்ளது.
தற்போது அயனாவரம் தாலுகாவில் கொளத்தூர், பெரவள்ளூர் மற்றும் அயனாவரம் என்று 4 பகுதிகள் இருக்கின்றன. இதில் கொளத்தூரை தலைமை இடமாகக் கொண்டு கொளத்தூர் என்கின்ற புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியின் கீழ் கொளத்தூர் மற்றும் பெரவள்ளூர் அதன் பகுதிகளான பெரவள்ளூர், சின்னச் செம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகள் இணைக்கப்படும்.
அதேபோல் இனி அயனாவரம் தாலுகாவில் கொன்னூர் அதன் பகுதிகளான மல்லிகைச்சேரி மற்றும் அயனாவரம் பகுதிகள் மட்டுமே அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டுள்ள கொளத்தூரில் புதிய அரசு பணியிடங்களும் கொண்டுவரப்படும் எனவும், அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.