tamilnadu
ரேஷன் கடைகளில் பொருள்கள் இப்படித்தான் கொடுக்கணும்… தமிழக அரசு அதிரடி முடிவு…!
தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்களை விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கின்றது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு, எண்ணெய், சக்கரை போன்றவை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். ரேஷன் அட்டையை பொறுத்து பொருள்கள் வழங்கப்படும் வீதமும் அளவும் மாறுபடுகின்றது.
ரேஷன் பொருள்கள் எடை குறைவாக வழங்கப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ரேஷன் கடை ஊழியர்கள் தொடர்ந்து குறைவான அளவு பொருட்களை எடை போட்டு கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ரேஷன் பொருள்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்து இருக்கின்றது.
உணவுப் பொருட்கள் சுத்தமாக கிடைக்க வேண்டும் இடையில் ஏமாற்றம் செய்யக்கூடாது என்பதால் பொருள்கள் ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலமாக வழங்க அரசு முடிவு செய்திருக்கின்றது. அதன்படி இனி ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்களை விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து இருக்கின்றது.
அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் சட்டசபை தொகுதிக்கு ஒரு ரேஷன் கடையில் இது போன்ற பாக்கெட்டுகளில் பொருட்களை வழங்க உள்ளது. முதல் கட்டமாக சேலத்தில் ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் இதனை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு இருக்கின்றது.