Latest News
வாலிபால் போட்டியில் தோல்வி… மாணவர்களுடன் சேர்ந்து கலெக்டர் செய்த செயல்… வினோத சம்பவம்..!
வாலிபால் போட்டியில் மாணவர்கள் தோல்வி அடைந்ததால் அவர்களுடன் சேர்ந்து கலெக்டரும் தண்டால் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலமாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பல்லடம் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றார். அதில் ஆய்வின் ஒரு பகுதியாக பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் விடுதியை ஆய்வு செய்தார். அப்போது அங்கு மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுடன் கலெக்டர் கிறிஸ்துவராஜ் கலந்துரையாடினார். பின்னர் மாணவர்கள் அவரை வாலிபால் விளையாட வருமாறு கூறியிருக்கிறார்கள். மாணவர்களின் வற்புறுத்தலால் கலெக்டர் போட்டியில் பங்கேற்றார். கலெக்டர் தலைமையில் ஒரு அணியும், மற்றொரு அணியும் மோதிக்கொண்டன. போட்டி தொடங்குவதற்கு முன்பாக மாணவர்களிடம் பேசிய கலெக்டர் இந்த போட்டியில் தோல்வியடைந்தால் 10 தண்டால் எடுக்க வேண்டும் என்று சவால் விடுத்தார்.
இதையடுத்து 2 அணி மாணவர்களும் ஏற்றுக்கொண்டு போட்டியில் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் கலெக்டருக்கு கிறிஸ்துராஜ் தலைமையிலான அணி தோல்வி அடைந்தது. இதனால் மாணவர்களுடன் சேர்ந்து கலெக்டரும் 10 தண்டால் எடுத்தார். இது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.