Latest News
லட்டு விவகாரம்… ஏ.ஆர்.டைரி நிறுவனத்தின் மீது திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த புகார்…!
திண்டுக்கல்லில் இயங்கி வரும் ஏ.ஆர்.டைரி ஃபுட் நிறுவனத்தின் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார் கொடுத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தை தொடர்ந்து லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யை ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
அந்த ஆய்வில் நெய்யில் கலப்படம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள திருப்பதி பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் லட்டு தயாரிக்க கலைக்கப்பட்ட நெய் வழங்கிய திண்டுக்கலை சேர்ந்த ஏ ஆர் டைரி நிறுவனத்தின் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார் கொடுத்துள்ளது.
அதன்படி திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் புகார் தெரிவித்திருக்கின்றார். விலங்குகளில் கொழுப்புகள் உள்ளிட்ட பொருட்களை கலப்படம் செய்து நான்கு டேங்கர் நெய்யை சப்ளை செய்ததாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஏ.ஆர் டைரி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.