இந்தியாவில் கொரொனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் மக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வெளியே யாரும் வருவதில்லை. இதனால், இந்திய பொருளாதாரத்திலும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து, தமிழகத்தில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. அதில் குறிப்பாக, அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் அதிரடி அறிவிப்புகளை தொடர்ந்து அறிவித்து வருகின்றது. இந்நிலையில், வீடு தொடர்பான வரிகளை செலுத்த அவகாசம் நீடித்தது தமிழக அரசு.
அதன்படி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் அளித்துள்ளது, அனைத்து ஊராட்சிகளுக்கும் 3 மாதம் நீட்டித்தாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.