Latest News
தொடங்கிய சில மணி நேரத்திலேயே முடிவடைந்த தீபாவளி டிக்கெட் புக்கிங்…ஆர்வம் காட்டிய பயணிகள்…
நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுவதில் தீபாவளி பண்டிகையும் ஒன்று. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தினத்தில் கவலைகளை எல்லாம் மறந்து குடும்பத்தோடு உற்சாகாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. வெளி ஊர்களில் வேலை பார்த்து வருபவர்கள் தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊரில் கொண்டாடுவதையே அதிகம் விரும்புவர்.
சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்னதாக புறப்படத் தயாராகி விடுவார்கள். இவர்களின் பயணத்தில் ரயில் பயணம் முக்கியத்துவம் பெரும். இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் முப்பதி ஒன்றாம் தேதியன்று வருகிறது.
வியாழக்கிழமையன்று வரும் இந்த பண்டிகைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு முன்கூட்டியே செல்ல திட்டமிடுவார்கள். இவர்களின் வசதிக்காக நூற்றி இருபது நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் புக் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுருப்பவர்களின் வசதிக்காக முன்பதிவு செய்து கொள்ள புக்கிங் இன்று தொடங்கியுள்ளது. அக்டோபர் மாதம் 28ம் தேதி திங்கட்கிழமைக்காண முன்பதிவு இன்று தொடங்கியது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன் பதிவு துவங்கிய சில மணி நேரங்களிலேயே வேகமாக முடிந்தது. பெரும்பாலனவர்கள் ஆன்-லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்ததால் விரைவாகவே முடிவடைந்து ரிசர்வேஷன்.
அக்டோபர் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை பயணம் செய்ய நினைப்பவர்கள் நாளை முன் பதிவு செய்து கொள்ளலாம். அதே போல் புதன்கிழமையான 30ம் தேதி தங்களின் பயணத்தை முடிவு செய்துள்ளவர்கள் நாளை மறு நாள் முன் பதிவு செய்துககொள்ளலாம். தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து ரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.