Latest News
திருவள்ளுவர் வைகாசி அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதற்கு ஆதாரம் இல்ல… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!
திருவள்ளுவர் வைகாசி, அனுஷம் நட்சத்திரத்தில் தான் பிறந்தவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் மாதம் தை 2-ம் தேதி திருவள்ளுவர் தினமாக தமிழகத்தில் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளை செல்லாது என்று அறிவித்து வைகாசி மாசம் அனுஷம் நட்சத்திரத்தை திருவள்ளுவர் பிறந்த நாளாக அறிவிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் திருநாள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் சாமி தியாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு எம் தண்டாயுதபாணி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 1935 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்து அரங்கில் மறைமலை அடிகளார் போன்ற தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு வைகாசி மாசம் அனுஷம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
மேலும், 600 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூரில் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலில் வைகாசி மாசம் அனுஷம் நட்சத்திரத்தில் அவர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் தை 2-ம் தேதி திருவள்ளுவர் தினம் என்று தானே கொண்டாடப்படுகின்றது. திருவள்ளுவர் பிறந்த நாள் என்று கொண்டாடவில்லை என்று விளக்கம் கொடுத்தார்.
ஆதலால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் தான் பிறந்தவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் மனு கொடுத்தவர் தரப்பில் வைகாசி அனுஷ நட்சத்திர நாளில் திருவள்ளுவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு எந்தவித அதையும் இல்லை என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.