Latest News
சீல் வைக்கப்பட்ட சத்துணவு முட்டைகள் விற்பனை… சத்துணவு அமைப்பாளர் அதிரடி கைது…!
சீல் வைக்கப்பட்டிருந்த சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த சம்பவத்தில் துறையூர் சத்துணவு அமைப்பாளர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்கப்படுகின்றன. அது மட்டும் இல்லாமல் முன் பருவ கல்வி, சுகாதாரம், தன் சுத்தம், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு என்று ஊட்டச்சத்து அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றது.
அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு திட்டம் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தும் அளிக்கும் வகையில் மதிய உணவுடன் இலவசமாக முட்டையும் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் அமைந்திருக்கும் தனியார் ஹோட்டலில் தமிழக அரச அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் முட்டைகள் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இந்த முட்டைகளை அங்கன்வாடி மையப் பணியாளர்களிடமிருந்து சட்டவிரோதமாக வாங்கி பயன்படுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படம் வெளியாகிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து முட்டைகளை தனியார் ஓட்டலுக்கு விற்பனை செய்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் ஆகியவற்றிற்கு சீல் வைத்தார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக துறையூர் அருகே உள்ள மதுராபுரி ஊராட்சி ஒன்றிய பள்ளியிலிருந்து இந்த முட்டைகள் ஓட்டலுக்கு விற்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. அந்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமார் என்பவர் ஹோட்டல் உரிமையாளர் ரத்தினம் என்பவரிடம் முட்டைகளை விற்பனை செய்து இருக்கின்றார். இதையடுத்து அந்த சத்துணவு அமைப்பாளர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.