---Advertisement---

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த மாவட்டங்களில் எல்லாம் மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

Published on: August 6, 2024
---Advertisement---

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகின்றது .

தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி உருவாகி இருக்கின்றது. மேற்கு திசை காட்டின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் 30 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.

அதன்படி திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய 30 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.