tamilnadu
குஷ்பூ, ரஜினி, மோடி வரிசையில்… தமிழகத்தில் ஏலியனுக்கு கோவில் கட்டிய நபர்…!
சேலத்தில் ஏலியனுக்கு கோவில் கட்டி நபர் ஒருவர் வழிபாடு செய்யும் சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
சேலம் மாவட்டம் மல்லப்பூம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரில் லோகநாதன் என்பவர் வேற்று கிரகவாசியான ஏலியனுக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வருகின்றார். ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு தினம் தோறும் ஏகப்பட்ட பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த கோவிலை கட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில் இந்த கோவில் சித்தர் பாக்யா என்று அழைக்கப்படும் லோகநாதனின் குருநாதர் சித்தர் பாக்யா ஜீவசமாதி அருகே ஏலியன் சித்தர், அகத்திய முனிவர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
இதுவரை எங்கும் ஏலியன் சித்தர் இல்லை எனவும் இங்குதான் உள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார். தற்போது கோவில் திருப்பணி நடைபெற்று வருவதால் குறைந்த அளவு பூஜை நடைபெறுவதாகவும், கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அனைத்து விதமான பூஜைகளும் இந்த நடைபெறும் என்றும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.