tamilnadu
தமிழக வெற்றிக் கழகத்திற்கு 3 விதமான கட்சிக் கொடிகள் ரெடி… வெளியான புது அறிவிப்பு…!
தமிழக வெற்றிக் கழகத்திற்கு 3 விதமான கட்சி கொடிகள் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அரசியலில் களம் காண இருக்கின்றார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றார்.
இதற்கிடையில் மேலும் ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டு முழுக்க முழுக்க சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் அடுத்தடுத்து விஜயின் கட்சி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. முதற்கட்டமாக 3 கொடிகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் எந்த கொடியை பயன்படுத்துவது என்பதை பற்றி நடிகர் விஜய் முடிவெடுப்பார் என்று கூறப்படுகின்றது.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளில் கட்சி நிர்வாகிகள் தற்போது தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். மேலும் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வெளியாகும் வரை தமிழக வெற்றி கழகம் தொடர்பாக எந்த ஒரு புதிய அறிவிப்பும் வராது என்று தகவல் வெளியாகியிருக்கின்றது. மேலும் செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியான பிறகு தமிழக வெற்றி கழகத்தின் கொடி, மாநாடு தேதி என அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.