ரேஷன் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை… வெளியான அறிவிப்பு..!

ரேஷன் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை… வெளியான அறிவிப்பு..!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் 20ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கின்றது. மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளுக்காக ரேஷன் கடை ஊழியர்கள் வேலை செய்த நிலையில் அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த பணியை கடந்த ஆண்டு ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் ரேஷன் கடை பணியாளர்கள் வேலை செய்தனர். இரண்டு நாள் பணிக்காலத்தை ஈடு செய்யும் வகையில் ஜூன் 15ஆம் தேதி ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதம் வரும் சனிக்கிழமை அதாவது நாளை மறுநாள் விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.