tamilnadu
கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து பயங்கரம்… வாகனங்கள் மோதி 5 பேர் உயிரிழப்பு…!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி என்கின்ற தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்துக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது எட்டு கார்கள், நான்கு லாரிகள், ஒரு பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன .
இந்த விபத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து இருக்கிறார்கள். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.