---Advertisement---

டாஸ்மாக் மூட சொன்னால் இதை மட்டும் மூடியிருக்கிறார்கள் – தமிழக அரசின் நடவடிக்கை !

By Vino
Published on: March 17, 2020
---Advertisement---

தமிழகத்தில் கொரோனா பீதியால் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் பார்களை மட்டும் மூட சொல்லி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விமான நிலையங்கள், அலுவலகங்கள் என எல்லாவற்றையும் மூட அரசுகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோயில்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன.

ஆனால் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான டாஸ்மாக் கடைகள் இன்னும் மூடப்படுவதில்லை. அதுமட்டுமில்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரியப்பிரகாசம் என்ற வழக்கறிஞர் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில்சென்னையில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. அந்த கடைகளில் சுகாதாரமற்ற முறையில் பார்கள் இயங்குவதால், கொரோனோ வைரஸ் பரவ 90 சதவீதம் வாய்ப்புள்ளது. எனவே, தமிழகம் முழுதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். ‘ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்று விசாரித்த நீதிமன்றம் ஒரு வாரத்துக்குள் இது சம்மந்தமாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் வாங்கி சென்று வீட்டிலோ அல்லது வேறு எங்கோ வைத்துக் குடித்துக் கொள்ளலாம்.