தமிழகத்தில் கோரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்வு – இன்று மட்டும் 102 புதிய நோயாளிகள்!

தமிழகத்தில் கோரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்வு – இன்று மட்டும் 102 புதிய நோயாளிகள்!

தமிழகத்தில் இன்று மேலும் 102 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 52,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2200 ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 309  பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று மேலும் 102 பேருக்குக் கோரொனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை சற்று முன்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார். இதன் மூலம் மகாராஷ்டிராவை அடுத்து இந்தியாவில் அதிக பாதிப்பாளர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இன்னும் 400க்கும் மேற்பட்டோர்களின் சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.