tamilnadu
விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும்… கொடியேற்று விழாவில் த.வெ.க விஜய்…!
சென்னை பனையூர் அலுவலகத்தில் த.வெ.க கொடியை அறிமுகப்படுத்தி நடிகர் விஜய் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்திருந்ததாவது: “அரசியல் பயணத்தை தொடங்கி பிப்ரவரி மாதம் கட்சியை அறிவித்தேன். இந்த நாளுக்காக தான் காத்திருக்கின்றேன்.
த.வெ.க கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் வருங்கால எதிர்காலமாக பார்க்கின்றேன். தமிழக மக்களின் வெற்றிக்கான ஒரு கொடியாக த.வெ.க கொடி அமையும். மேலும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும்.
ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்கு உழைக்க தயாராகுவோம். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம். நம்பிக்கையாக இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். த.வெ.க கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியதில் பெருமை. கொடிக்கான விளக்கத்தை மாநாடு நடக்கும் அன்றைய தினம் உங்கள் அனைவருக்கும் விவரிக்கின்றேன்” என்று நடிகர் விஜய் பேசியிருந்தார்.