tamilnadu
இயல்பை விட 88% அதிகம்.. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை.. வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்..!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை காட்டிலும் 88 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நான்கு மாதங்கள் பெய்யும். பொதுவாக தென்மேற்கு பருவமழையின் மூலமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.
இந்நிலையில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கின்றது. கர்நாடகா கேரளா போன்ற பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது .தமிழக மட்டுமில்லாமல் அண்டைய மாநிலமான கேரளாவிலும் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகின்றது. ஜூன் 1ம் தேதி முதல் இன்று ஜூலை 17ஆம் தேதி வரை தமிழகத்தில் 160 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் பெய்யும் சராசரி மழையின் அளவு 85 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 88 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.