tamilnadu
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போயிருக்கு… நாம் தமிழர் கட்சி அறிவித்த ஆர்ப்பாட்டம்…!
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக சீமான் தெரிவித்திருக்கின்றார். மேலும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக அறிவித்திருக்கின்றார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் தமிழர் கட்சி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
“பேரன்பு கொண்டு நாங்கள் பெரிதும் நேசிக்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு, படுகொலைகள், மின்கடன உயர்வு இவற்றையெல்லாம் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாளை (04-08-2024) காலை 11 மணிக்கு மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்! இவ்வாறு அதில் கூறிப்பிட்டுள்ளார்..