tamilnadu
தமிழகத்தில் அடுத்து 7 நாட்களுக்கு… வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..!
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: “மேற்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 26ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
வலுவான காற்று 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும். மேலும் 27ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. சென்னை மற்றும் அதன் புறநகர்களை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு மட்டும் மழை பெய்து வரும் நிலையில் இன்று ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.