tamilnadu
தமிழகம் முழுவதும் 2 லட்சம் குடும்பங்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!
தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்க உள்ளதாக தமிழக அரசு நுகர் பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்திருந்தார்கள். மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் மீண்டும் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
அதன்படி 2 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கும் என்று தமிழக நுகர் பொருள் வாணிப கழகம் முடிவெடுத்துள்ளது. புதிய ரேஷன் அட்டை வேண்டி இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இன்று முதல் தினமும் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு கடைகளில் புதிய பொருள் ஒன்றையும் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதன்படி இனி ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து இதனை விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட வேண்டும். இந்த பொருள்களின் எடையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது, ஏமாற்றக்கூடாது என முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருள்களில் பூச்சி இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.