தமிழகத்தில் 4 அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு… துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்…!

தமிழகத்தில் 4 அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு… துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்…!

தமிழகத்தில் இன்று 4 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்று கொண்டனர். மேலும் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார்.

நேற்று இரவு தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. மேலும் ஜாமினில் இருந்து வெளிவந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் புதிய இடம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. செந்தில் பாலாஜி உட்பட 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதோடு ஆறு அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். இன்று மதியம் 3.30 மணிக்கு கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் புதிய அமைச்சர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஏற்பு நிகழ்ச்சியில் இரா ராஜேந்திரனுக்கு முதலில் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து தமிழக அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.