tamilnadu
தமிழக அமைச்சரவையில் மாற்றம்…? இன்று மாலை வெளியாக போகும் அறிவிப்பு…!
முதல்வர் மு க ஸ்டாலின் அரசு முறை பயணமாக வரும் 27ஆம் தேதி அமெரிக்கா செல்ல இருக்கின்றார். முதல்வர் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. அந்த வகையில் தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்ட புதிதாக மூன்று பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. யார் யாருக்கு எந்தெந்த பதவிகள் கிடைக்கப் போகின்றது என்பது தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்பு இருக்கின்றது என்று கட்சிக்குள் அரசியல் புரசலாக பேசி வரும் நிலையில் இன்று மாலை இது தொடர்பான விவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.