Latest News
தமிழக அமைச்சரவை மாற்றம்… நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் அறிவிப்பு…!
தமிழக அமைச்சரவையில் மாற்றம் தொடர்பான அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று முதல் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். தற்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினில் இருந்து வெளிவந்துள்ள நிலையில் மீண்டும் அமைச்சரவையில் அவருக்கு இடம் வழங்கப்படுமா?
அது மட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதல் அமைச்சர் பதவி வழங்கப்படுமா? என்பது தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும் நாளை வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாகா மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
துணை முதலமைச்சர் பதவி புதிய அமைச்சர்கள் பதவி யார் யாருக்கு கிடைக்கப் போகின்றது என்ற கேள்விக்கான விடை நாளை கிடைக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது. நாளை தமிழகத்தில் எந்தத் துறைக்கு எந்த அமைச்சர்கள் மாறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.