Connect with us

சிறுபான்மை மொழி மாணவர்களுக்கும் இந்த தேர்வு கட்டாயம்… தேர்வுத்துறை அதிரடி உத்தரவு…!

Latest News

சிறுபான்மை மொழி மாணவர்களுக்கும் இந்த தேர்வு கட்டாயம்… தேர்வுத்துறை அதிரடி உத்தரவு…!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தை கட்டாயம் எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டிருக்கின்றது.

சிறுபான்மை மொழி மாணவர்களும் தமிழ் தேர்வை கட்டாயமாக எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தி இருக்கின்றது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களின் 13 வகையான விவரங்களை சரி பார்ப்பதற்கு தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு காரணமாக சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு தமிழ் பாடத் தேர்வில் இருந்து விலக்கு கொடுக்கப்பட்டது. அதன்படி தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம் ஆகிய மொழிகளை தாய் மொழியாக கொண்ட மாணவர்களுக்கு விலக்கு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு தமிழ் பாடத் தேர்வை கட்டாயம் மற்றும் மொழி மாணவர்களும் எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்திருக்கின்றது.

தமிழை தாய் மொழியாக கொண்டிறாத பத்தாம் வகுப்பு சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து கடந்த ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் தமிழ் மொழி கட்டாயம் என்று நடைமுறை இருக்கின்றது.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி தேர்வு கட்டாயம் எழுதப்பட வேண்டும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதன்படி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் கட்டாயம் தமிழ் தேர்வு எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

More in Latest News

To Top