Business
ஒரே நாளில் இவ்ளோ உயர்வா?…அதிரடி காட்டிய தங்கத்தின் விலை!…
சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்ற்ம் ஏற்பட்டுள்ளது. தங்க நகை பிரியர்களுக்கு இது அதிர்ச்சி தரக் கூடிய செய்தியாகவே பார்க்கப்படுகிறது. இதே போல் தான் வெள்ளியின் விற்பனை விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது இன்று.
இந்தியா போன்ற கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் நாட்டில் நாளுக்கு நாள் தங்கத்தின் தேவையும், அதன் மீதான மோகமும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் செய்யவதில் தங்க நகைகளுக்கு அதிகமான முக்கியத்துவம் வழங்கப்படுவதால் இதன் தேவை உயர்ந்து கொண்டே தான் வருகிறது.
நேற்றைவிட ஒரு கிராம் இருபத்தி ஐந்து கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு இருபத்தி ஐந்து ரூபாய் (ரூ.25/-) அதிகரித்தது. இதனால் ஒரு கிராம் தங்க விலை ஆராயிரத்து எழுனூற்றி என்பத்தி ஐந்து ரூபாயாக(ரூ.6785/-) உள்ளது.
சவரன் ஒன்றிற்கு நேற்றை விட இருநூறு ரூபாய் அதிகரித்து(ரூ.200/-) ஐம்பத்தி நாலாயிரத்து இருநூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.54,280/-) விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையிலும் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிராம் ஒன்றிற்கு நேற்றை விட ரூபாய் ஒன்று (ரூ.1/-) உயர்ந்து நூறு ரூபாய்க்கு (ரூ.100/-) விற்கப்படுகிறது. இதன் படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒரு லட்சமாக (ரூ.1,00,000/-) இருக்கிறது.