Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

Latest News tamilnadu

உண்மைதான்… முதலைகளிடமிருந்து மோடி தப்பு செய்த கதை தமிழகத்தில் இல்ல… சு வெங்கடேசன் பதிலடி..!

முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதை தமிழக பாடப்புத்தகங்களில் இல்லை என்று ஷூ வெங்கடேசன் தெரிவித்து இருக்கின்றார்.

தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மாநில பாடத்திட்டங்கள் தரம் மோசமாக இருப்பதாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேசி இருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரின் பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஆளுநரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை எம்பி சு வெங்கடேசன் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருந்ததாவது “மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் என் ரவி தெரிவித்திருந்தார். புல் புல் பறவை சவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழக பாடப் புத்தகங்களில் இல்லை.

தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் தான் ஆளுநரின் பதிவு இருக்கின்றது” என்று தெரிவித்திருக்கின்றார். மேலும் அண்மையில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள உயர் கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டியலில் 100 இடங்களில் தமிழகத்தில் 22 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.