Latest News
சுமாரா தான் இருக்குதுங்க சீசன்…வெயில் வேற சுள்ளுன்னு அடிக்குதாமே குற்றாலத்துல…
குற்றாலத்தில் நேற்றை விட இன்று மாற்றம் காணப்பட்டது, அருவிகளில் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வந்தது தண்ணீரின் அளவில். பாரபட்சமில்லாமல் எல்லா அருவிகளுலும் இதே நிலை தான் தொடர்ந்து வந்தது. வெயிலின் தாக்கம் அவ்வப்போது அதிகரித்து வந்தாலும் குளிக்க ஏதுவான நிலை தான் இருந்து வந்தது நேற்று வரை.
காற்று மற்றும் சாரல் கடந்த சில நாட்களாகவே தேட வைத்து குற்றாலத்தில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகளை. ஒரு சில நேரத்தில் விழுந்த சாரல் மனதை மகிழ வைத்தது.
அதே நேரத்தில் திடீர் திடீரென வருடிய தென்றல் காற்றும் ஆனந்தத்தை அதிகரிக்க வைத்தது. இப்படி ஒவ்வொரு நாளும் சிறிய மாற்றங்களோடு இருந்து வருகிறது இந்தாண்டிற்கான குற்றால சீசன்.
இன்று காலை பத்தரை மணி நிலவரப்படி எல்லா அருவிகளிலும் விழக்கூடிய தண்ணீரின் அளவில் மாற்றம் இருந்தது. நேற்று போல இல்லாமல் இன்று ஃபைவ் ஃபால்ஸ், பழைய குற்றாலம், மெயின் அருவியில் விழும் தண்ணீர் குறைவாகவே தென்படுகிறது. வெயிலின் தாக்கம் நேற்றை விட இன்று அதிகமாகத் தான் இருக்கிறது.
வருபவர்களை ஏமாற்றாத அளவில் மிதமான தண்ணீர் அதிக நேரம் எடுத்து உல்லாசமாக குளித்து மகிழவைக்கும் படியான குறைவான கூட்டம் இது தான் இன்று காலையின் சீசன் நிலவரமாக இருந்து வருகிற்து குற்றாலத்தை பொறுத்தவரை.