Latest News
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் கைது… வெளியான தகவல்…!
தமிழக மீனவர்கள் 5 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள், படகுகளை பறிமுதல் செய்தல், கப்பலால் விசைப்படகுகளை மோதுவது, நடுக்கடலில் தாக்குதல் நடத்துவது, வலைகளை அறுத்து சேதப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல் காரணமாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரார் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறை பிடித்து இருக்கின்றனர். படகு ஒன்றையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து இருக்கின்றது.
கைதான மீனவர்கள் 5 பேரும் கன்னியாகுமாரியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி இருக்கின்றன இலங்கை கடற்படையினரின் அச்சுறுதலால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் இதற்கு தீர்வு என்பதே இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கின்றது தொடர்ந்து கைதாவது பின்னர் அவர்களை சிறையில் வைத்து அடித்து துன்புறுத்தி விடுவிப்பதும் தொடர்கதையாகி வருகின்றது.