பள்ளியில் மந்திரம் கூறினால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என்ற மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என்று மூடநம்பிக்கைகளை கூறும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கின்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி பெரும் ஏற்படுத்தியிருக்கின்றது.
மகாவிஷ்ணு என்பவர் 2 அரசு பள்ளிகளில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில் முழுக்க முழுக்க ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தி இருக்கின்றார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கின்றது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசியிருக்கின்றார்.
யாருடைய அனுமதியில் இது போன்ற அவர் சொற்பொழிவை ஆற்றினார் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதிலும் அரசு பள்ளிக்குள் அவரை யார் அனுமதித்தார்கள் என்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசு பள்ளிகளில் மகாவிஷ்ணு என்ற நபர் மூலம் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

