---Advertisement---

ஊட்டியில் நாளை முதல் சிறப்பு மலை ரயில்… வெளியான சூப்பர் தகவல்…!

Published on: August 15, 2024
---Advertisement---

ஊட்டியில் நாளை முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தொடர் விடுமுறையை ஒட்டி ஊட்டி குன்னுருக்கு இடையே சிறப்பு மலை ரயில் நாளை முதல் இயக்கப்படுகின்றது. அதன்படி குன்னூரில் இருந்து காலை 8.30 புறப்பட்டும் ரயில் 9.40-க்கு வந்தடையும். மீண்டும் ஊட்டியில் இருந்து மாலை 4.45-க்கு புறப்பட்டும் ரயில் 5. 55 மணிக்கு குன்னூர் செல்லும். முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கின்றன.

மேலும் ஊட்டி கேத்தி இடையே 3 ஜாயி ரைடு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. முதல் சுற்று ஊட்டியில் இருந்து காலை 9:45 புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி செல்லும். அங்கிருந்து 10:30 புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டி வந்தடையும். இரண்டாவது சுற்றில் 11:30 புறப்பட்டு 12:10க்கு கேத்தியை அடையும்.

மீண்டும் 12.40 புறப்பட்டு 1.10 மணிக்கு ஊட்டியை வந்தடையும். மூன்றாம் சுற்று மாலை 3 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தியையும், அங்கிருந்து 4 மணிக்கு புறப்பட்ட 4.30 மணிக்கு ஊட்டியையும் வந்தடையும். இரண்டு சிறப்பு மலை ரயில்களும் நாளை மற்றும் நாளை மறுநாள் மற்றும் 25ஆம் தேதி என்று மூன்று நாட்களுக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.