Latest News
காலாண்டு விடுமுறை… சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது… பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு..!
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது.
தமிழகத்தில் பிளஸ் டூ, பிளஸ் ஒன் வகுப்புகள் மற்றும் 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. தேர்வானது நாளையுடன் முடிவடைய உள்ளன. காலாண்டு விடுமுறைக்கு பின்னர் வருகிற 3-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக் கல்வித்துறை காலாண்டு விடுமுறையை 6-ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்திருந்தது. இதையடுத்து காலாண்டு விடுமுறை முடிந்து வருகிற ஏழாம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களின் போது பள்ளிகளில் எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. 28ஆம் தேதி முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எந்த வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது பள்ளி திறப்புக்கு முன்பு பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாள் அன்றே அனைத்து மாணவர்களுக்கும் திருத்திய விடைத்தாள்களை வழங்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு வழங்கியிருக்கின்றது.