Latest News
அப்பாட பெருசா ஒன்னும் கூடலையே தங்கத்தோட விலை!… நகைப் பிரியர்களுக்கு ஆறுதலான செய்திதானா?…
ஜுலை மாதம் துவங்கியதிலிருந்தே இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் சென்னை விற்பனை விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதுமில்லை. விலையில் சிறய அளவிலான மாற்றங்களே தொடர்ந்து காணப்படுகிறது. இது ஆபரண விரும்பிகளை மகிழச்செய்துள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் தங்க நகை முதலீட்டாளர்களையும் ஆறுதலடையச் செய்துள்ளது. தங்கத்தின் மீதான மோகம் இந்தியாவில் எப்போதுமே குறைந்ததே கிடையாது. நமது கலாச்சாரத்தின் படி சுப நிகழ்வுகள் அனைத்திலும் முன் நிற்பது தங்க நகைகள் தான். எந்த ஒரு சூழலிலும் தவிர்க்க முடியாத அத்தியாவசிய பொருளாகவே மாறி விட்டது தான் தங்க நகைகளின் தனிச் சிறப்பு.
தங்கத்தின் தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்ற காரணத்தினால் விலையில் மாற்றங்களும் இருந்து வருகிறது. சென்னையை பொறுத்த வரை இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விற்பனை விலையில் இன்று மாற்றம் இருந்தது.
ஒரு கிராம் ஆராயிரத்து அறனூற்றி தொன்னூற்றி ஐந்து ரூபாய்க்கும் (ரூ.6,695/-)ம் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கம் சவரன் ஒன்றுக்கு ஐம்பத்தி மூன்றாயிரத்து ஐனூற்றி அறுபது ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி கிராம் ஒன்றிற்கு தொன்னூற்றி ஆறு ரூபாயாகவும் (ரூ.96/-), கிலோ ஒன்றிற்கு தொன்னூற்றி ஆராயிரம் ரூபாயகாகவும் (ரூ. 96,000/-) இருந்து வருகிறது பெரிய அளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையில் மாற்றமில்லாதது ஒரு பக்கம் நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் கடந்த சில நாட்களாக ஏறுமுகத்திலே இருந்து வருவது கவலையையும் தந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் துவக்கத்தில் இதே போல உயர்வை நோக்கியே சென்ற தங்கத்தின் விலை நாளடைவில் வெகுவாக குறையத் துவங்கியது மாத இறுதியில்.