Connect with us

டிஎன்பிஎஸ்சி தலைவராக ஐஏஎஸ் அதிகாரி நியமனம்… வெளியான தகவல்..!

tamilnadu

டிஎன்பிஎஸ்சி தலைவராக ஐஏஎஸ் அதிகாரி நியமனம்… வெளியான தகவல்..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக எஸ்கே பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இது தொடர்பான அறிவிப்பை கவர்னர் ரவி அறிவித்திருக்கின்றார்.

தற்போது தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் பிரபாகரன் 2028 ஜனவரி மாதம் வரை tnpsc தலைவராக பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் 2022 ஜூனில் ஓய்வு பெற்றார்.

அதன் பிறகு உறுப்பினராக இருந்த முனியநாதன் பொறுப்புத் தலைவராக செயல்பட்டு வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய தலைவர்கள் யாரும் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது மேலும் டிஎன்பிஎஸ்சி- இன் புதிய தலைவராக டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்து வந்தது. அதனை கவர்னர் ஆர்என் ரவி பரிசீலிக்காமல் இருந்து வந்த நிலையில் திடீரென்று ஐஏஎஸ் எஸ் பிரபாகரனை தலைவராக நியமித்து அறிவித்திருக்கின்றார்.

More in tamilnadu

To Top