Connect with us

பாலியல் வழக்கில் கைதான சிவராமனை தொடர்ந்து… அவரின் தந்தையும் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்…!

tamilnadu

பாலியல் வழக்கில் கைதான சிவராமனை தொடர்ந்து… அவரின் தந்தையும் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்…!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் ஒன்றை நடத்தி அங்கு வந்த 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போலி பயிற்சியாளரான சிவராமன் கைது செய்யப்பட்டார். இவர் போலீஸிடம் இருந்து தப்ப முயன்ற போது அவரது கால் முறிந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாகவும் அதனால் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிவராமனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இந்நிலையில் காவேரிப்பட்டினம் நடேஷா திருமண மண்டபம் அருகே அவரின் தந்தையான அசோக்குமார் மதுபோதையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் தலையில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் தற்போது உயிரிழந்திருக்கின்றார்.

More in tamilnadu

To Top