மறைந்த தலைவர் சீதாராம் யெச்சூரியின் வீட்டுக்கு சென்று முதல்வர் மு க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியிருக்கின்றார்.
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்ற முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தினார்.
மேலும் பிரதமர் மோடிக்கு பரிசு பெட்டகமும் வழங்கினார் முதல்வர் மு க ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து முதல்வர் மறைந்த சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரியின் வீட்டிற்கு சென்றார் அங்கு சீதாராம் யெச்சூரி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு க ஸ்டாலின் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் முதல்வர் மட்டுமில்லாமல் சீதாராம் யெச்சூரியின் வீட்டிற்கு எம்பி கனிமொழி, டி.ஆர் பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து இருந்தார்கள். இதைத் தொடர்ந்து அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.