Latest News
சிறையிலிருந்து வெளியில் வந்தார் செந்தில் பாலாஜி… தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…!
இன்று சிறையில் இருந்து ஜாமினில் வெளியில் வந்த செந்தில் பாலாஜிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கோரி பணமோசடி செய்த வழக்கில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி மேல்முறையீடு செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அபய் எஸ் ஓ.கா, ஏ ஜி மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி தேதி எதுவும் குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்கள்.
இதைத்தொடர்ந்து இன்று காலை செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட செய்தியை அறிந்த அவரின் ஆதரவாளர்கள் காலை முதல் சிறைவாசலில் குவிய தொடங்கினர். செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்த நிலையில் அவர் விடுவிப்பதற்கான உத்தரவு கைக்கு கிடைக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைத்த பிறகு இதில் முடிவெடுப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதி மதி கார்த்திகேயன் கூறியிருந்தார்.
இதனால் செந்தில் பாலாஜி எப்போது வெளியில் வருவார் என்று ஜெயிலுக்கு வெளியில் தொண்டர்கள் காத்திருந்தார்கள். இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி தரப்பில் ரூபாய் 25 லட்சம் இரு நபர் ஜாமின் உத்திரவாதம் முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வர தடை இல்லை என்று உத்தரவிட்டார். இதையடுத்து அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அவரின் பாஸ்போர்ட் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. 471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி தற்போது வெளியில் வந்திருக்கின்றார். சிறையில் இருந்து வெளியில் வந்த அவருக்கு செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.