Latest News
பொய் வழக்கிலிருந்து நிச்சயம் மீண்டு வருவேன்… செந்தில் பாலாஜி பேட்டி…!
தன் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கிலிருந்து நிச்சயம் மீண்டு வருவேன் என்று சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜி கூறி இருக்கின்றார்.
பண மோசடி வழக்கில் கைதாகி சிறை சென்றிருந்த செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியில் வந்தார். 471 நாட்கள் சிறையில் கழித்த இவர் இன்று மாலை வெளியே வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்ப்பதற்கு சிறை வாசலில் ஆர் எஸ் பாரதி காத்திருந்து வரவேற்றார்.
பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமான வரவேற்பு வழங்கினார்கள். பலத்த வரவேற்புடன் சிறையில் இருந்து வெளியில் வந்து செந்தில் பாலாஜி பின்னர் கலைஞர் சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர் திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு வாழ்நாள் முழுக்க எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி. என் மீது போடப்பட்ட பொய் வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன். என் மீதான பொய் வழக்கிலிருந்து நான் விரைவில் மீண்டு வருவேன் என்று கூறியிருக்கின்றார்.