Latest News
அமைச்சர் உதயநிதியை சந்தித்த செந்தில் பாலாஜி… மீண்டும் பதவி வழங்க வாய்ப்பா…?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் உதயநிதியை இன்று அவர் அலுவலகத்தில் சந்தித்து இருக்கின்றார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. இதையடுத்து நேற்று மாலை மிகுந்த வரவேற்புடன் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியானார். ஜாமினில் வெளியில் வந்த செந்தில் பாலாஜிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினார்கள். வெளியில் வந்த உடனே செந்தில் பாலாஜி கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து இருக்கின்றார். சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற செந்தில் பாலாஜி அவரை சந்தித்தார். இது தொடர்பாக அமைத்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து இருக்கின்றார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில் 471 நாட்கள் சிறைவாசம் முடிந்து வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். அவரை வரவேற்கின்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கின்றோம்’ என்று குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவையில் பதவி வழங்கப்படுமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.