tamilnadu
நெஞ்சு வலியில் செந்தில் பாலாஜி… மருத்துவமனையில் அனுமதி…!
சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.
நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்து இருக்கின்றார் .இதனால் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். மதிய உணவு சாப்பிட்ட பிறகு நெஞ்சுவலி இருப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாகவும், அதன் பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.