tamilnadu
பாஜக கிட்டப்போய் சீட்டு கேட்டு நிக்கிறதா…? அப்படி ஒரு நிலைமை வந்தால் செத்துடுவோம்.. செல்லூர் ராஜு காட்டம்…
பாஜகவிடம் சென்று சீட்டு கேட்டு நிற்கும் நிலை வந்தால் செத்து விடுவோம் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசியிருக்கின்றார். தமிழகத்தில் அதிமுகவின் வாக்கு விகிதம் 40 சதவீதத்திலிருந்து 19% ஆக குறைந்திருக்கின்றது.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று அதிமுக அறிவித்திருந்தால் பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் என்று சமீபத்திய பேட்டியில் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காட்டமாக பேசி இருக்கின்றார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது அண்ணாமலையிடம் சீட்டு கேட்டு அதிமுக நிற்க வேண்டுமா? என்ன வாய் கொழுப்புடன் பேசுகிறார்கள் பாருங்கள். அதிமுகவுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் நாங்கள் செத்து விடுவோம் என்று செல்லூர் ராஜு அந்த பேட்டியில் பதிலளித்திருந்தார்.