tamilnadu
எது சரக்க டோர் டெலிவரி செய்ய போறீங்களா…? ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை… விளக்கம் கொடுத்த டாஸ்மாக்…!
நாளிதழ் ஒன்றில் ஆல்கஹால் குறைவாக இருக்கும் மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக இருக்கும் மதுபானங்களை zomato மற்றும் swiggy நிறுவனங்கள் மூலமாக மக்களுக்கு வீடுகளுக்கே டெலிவரி செய்யும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில் தமிழக அரசுக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கின்றதா? அப்படி ஏதேனும் இருந்தால் அதனை உடனே கைவிட வேண்டும். இது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை கொடுக்கும். மீறி இது போன்ற விஷயங்களை தமிழக அரசு முன்னெடுக்கும் வகையில் பாமக சார்பாக மக்களை திரட்டி போராட்டம் செய்வோம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்யும் எந்த திட்டமும் தற்போது இல்லை. மேலும் டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுவை அறிமுகம் செய்யும் திட்டமும் இல்லையென்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.