Connect with us

சாலைகளை மறைச்சு யாரை சந்தோஷப்படுத்த இந்த கார் பந்தயம்… சீமான் கடும் கண்டனம்…!

tamilnadu

சாலைகளை மறைச்சு யாரை சந்தோஷப்படுத்த இந்த கார் பந்தயம்… சீமான் கடும் கண்டனம்…!

ஃபார்முலா 4 என்ற கார்ப்பந்தயத்திற்கான டிக்கெட் விற்பனையை தமிழ்நாட்டு விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையில் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியும், செப்டம்பர் 1ஆம் தேதிகளிலும் ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் என்கின்ற பெயரில் இரவு கார்பந்தயம் நடைபெற இருக்கின்றது. இதற்கான டிக்கெட்டுகளை paytm இன்சைடரில் உரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று உதயநிதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஃபார்முலா 4, கார் பந்தயம் அவசியம் தானா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி இருக்கின்றார். இது தொடர்பாக சீமான் தெரிவித்திருந்ததாவது “சென்னை தீவுத்திடல், அண்ணா சாலையில் கார் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்துள்ளது. இருங்காட்டுக் கோட்டை, சோழவரத்தில் உள்ள பந்தயத்திடலில் இதனை நடத்தலாமே…

மக்கள் பயணிக்கும் சாலையை மறித்து யாரை மகிழ்விக்க இந்த கார் பந்தயம், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அளவிற்கு ஒரு வீரரை கூட தமிழகத்தில் உருவாக்கவில்லை. பொழுதுபோக்கிற்காக கார் பந்தயம் நடத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாநிலத்தில் போராடிவரும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நிதி இல்லை.

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மாநில அரசிடம் நிதி இல்லை, மின்சார வாரிய கடனை அடைக்க நிதி இல்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை துயரை ஆழ்த்தும் நிலையில் கால்பந்தயம் தேவையா? மாதம் 1000 கொடுத்தால் தான் வாழ முடியும் என்ற வறுமை சூழலில் மக்களை வைத்திருக்கிறார்கள்” என்று அவர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.

More in tamilnadu

To Top